வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி !
Saturday, November 11th, 2023
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்தல் மற்றும் விரிவாக்குதல் ஆகியவற்றின் கீழ் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
30,000 அமெரிக்க டொலருக்கு மேற்படாத காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணங்களுடன் கூடிய புதிய மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரியற்ற அடிப்படையில் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
யாழ்ப்பாணத்தில் 18 நாள்களில் 16 இலட்சம் லீற்றர் பெற்றோல் விநியோகம் - யாழ்.மாவட்ட செயலர் தெரிவிப்பு!
2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் – அரசாங்கம் நம்பிக்கை!
|
|
|


