வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரை அரசமைப்புக்கு முரண்- சட்டத்தரணிகள் சங்கம்

இலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, ஸ்ரீலங்காவின் சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்கும் விடயமானது ஸ்ரீலங்கா அரசியலமைப்பிற்கு முரணானதாக அமையும் என்று ஸ்ரீலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தும் பரிந்துரை முன்லைக்கப்பட்ட போதே தாம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், பிரதமரும் கூட வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் ஈடுபடுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|