வெளிநாட்டு தொழில் வெற்றிடத்துக்கு அனுமதியளிக்கும் காலம் 2 மணித்தியாலங்களாக குறைப்பு – இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன நடவடிக்கை!
Saturday, December 4th, 2021
இலங்கை பணியாளர்களை ஆட்சேர்க்கும் நாடுகளின் தூதரகங்களுக்கு, அந்தந்த நாடுகளின் முகவர் நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்படும் தொழில் வெற்றிடங்களுக்கு அனுமதியளிக்கும் காலத்தை குறைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
16 நாடுகளின் வெளிநாட்டு தூதரக காரியாலயங்களின் தொழிலாளர் நலன்புரி பிரிவினால், குறித்த தொழில் வெற்றிடங்களுக்கு அனுமதியளிக்க, இரண்டு முதல் 3 வாரங்கள்வரையில் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த நாடுகளின் தொழில் முகவர் நிறுவனங்கள், தமது தொழில் வெற்றிடங்களை இந்தியா, பங்களாதேஷ் முதலான நாடுகளுக்கு அனுப்புவதாக இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், தொழில் வெற்றிடத்துக்கு அனுமதியளிக்கும் காலத்தை, 2 மணித்தியாலங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


