வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைன் அனுமதி முறைமை அறிமுகம்!
Thursday, July 27th, 2023
வனவிலங்கு பாதுகாப்புத் துறை, சுற்றுலாப் பயணிகள் தேசியப் பூங்காக்களுக்குள் தாமதமின்றி எளிதாகச் செல்ல ஒன்லைன் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கணினி மூலம் வழங்கப்படும் டிக்கெட்டுகள் பழுதடைந்து, காலதாமதம் ஏற்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கும் வகையில், திணைக்களம் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குச் செல்லத் திட்டமிடும் போது,ஒன்லைன் அனுமதி முறையின் மூலம் அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு குழு நடத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதால், இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பான தகவல்களை www.dwc.gov.lk என்ற இணையத்தளத்தில் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


