வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம் – நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

இலங்கையின் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு பொறுப்புள்ள நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துவதை உரிய கலந்துரையாடல் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பணமாகவோ அல்லது பொருட்கள், சேவைகளாகவோ வெளிநாட்டு நாணயங்களில் பெற்றுக் கொண்ட கடன்களே இவ்வாறு மீள் செலுத்துவது இடைநிறுத்தப்படுவதாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன் இணைந்தவாறு மேலதிக நடவடிக்கைகள் இடம்பெறுமென, அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பம்!
இலங்கைக்கு மேலதிகமான உதவிகளை வழங்க தயார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவிப்பு!
மருந்துப் பொருட்களின் இறக்குமதி தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் - சுகாதார அமைச்சர் கெகலிய ...
|
|