வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேணவேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!.

Saturday, July 13th, 2024

நாட்டில் வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது.கடன் மறுசீரமைப்பினால் மீளச் செலுத்த வேண்டியிருந்த கடன் தொகையில் 8 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைத்துள்ளது.

கடனைச் செலுத்துவதற்கான காலவகாசம் 2043 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையலாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


இலங்கை வங்கியில் வெளிநாட்டு செலவாணி இருப்பு:எதுவித பிரச்சினையும் இல்லை - வங்கியின் தலைவர் காஞ்சன ரத்...
"முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வாருங்கள் - எ...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு - செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வளிம...