வெளிநாட்டில் தொழில் புரியம் இலங்கையர்களால் இலங்கைக்கு கிடைக்கும் டொலர்களின் தொகை அதிகரிப்பு!
Monday, June 13th, 2022
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதம், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் தொகையில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.’
எவ்வாறாயினும், கடந்த வருடம் (2021) மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் மே மாதம் அனுப்பப்பட்ட பணம் மிகக் குறைவானதாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் அனுப்பி தொகை 248.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அதேசமயம் மே மாதம் அவர்கள் அனுப்பிய பணம், 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த வருடம் மே மாதம் வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணம் 460.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை!
இலங்கை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது - இந்திய உயர்ஸ்தானிகராலய...
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு - அனைத்து ஏற்பாட...
|
|
|


