வெளிநாட்டிலிருந்து வரும் பொதிகள் பரிசோதிக்கப்படும் – தபால் திணைக்களம்!

Monday, January 16th, 2017

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் பொதிகள் அனைத்தையும் பரிசோதனை செய்வதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இரண்டு புதிய ஸ்கான் இயந்திரங்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி மத்திய தபால் பரிமாற்றகத்தில் காணப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 100 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மற்றும் ஹஷிஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து, மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வரும் அனைத்துப் பொதிகளையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

post_logo1

Related posts: