வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பிள்ளைகளுக்கு கல்வி கற்க விசேட சலுகை!

Friday, April 5th, 2019

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களில் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இலங்கையர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பிள்ளைகள் அந்த நாடுகளிலேயே கல்வி கற்கின்றார்கள்.

அவ்வாறு கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர் மீண்டும் இலங்கையில் நிரந்தரமாக தங்க வருகை தருகின்றனர். அவர்களின் பிள்ளைகளை தேசிய பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வெளிநாட்டு வாழ் இலங்கைப் பிள்ளைகளை அரசாங்க பாடசாலைகளில் அனுமதிப்பதற்கும், ஆங்கில பிரிவில் கல்வியை தொடர்வதற்கும் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Related posts:

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- கட்டுப்படுத்துவதற்கான விஷேட செயலணி சுகாதார அமைச்சர் தலைமையில்...
ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது - பஸில் தெரிவிப்பு!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல 16ஆம் திகதிவரை விசேட பேருந்து தொடருந்து சேவைகள் - இலங்கை ...