வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்காக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற மாணவர் குழுவொன்றுக்கு கடந்த காலங்களில் இவ்வாறான விசேட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்தும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மாணவி வித்யா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை ஏற்றுமதிப்பொருட்களுக்கு அமெரிக்கா வரி அறவீடு!
வாக்காளர் அட்டைகள் மீளவும் ஒப்படைக்கப்படும்!
|
|