வெளிநாடு சென்றுள்ள பணியாளர்களுக்கு ஓய்வூதியம்!

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுளது என வெளிநாட்டு வேளைவாய்ப்பு சேமநல மைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள மேலும் தெரிவிக்கையில் இதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்று கூறினார்.
நட்டத்தில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இந்த வருடம் வருமானம் ஈட்டும் நிலையை அடைந்துள்ளது. வெளிநாட்டிலுள்ள பணியாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டு பல நலன்புரித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனதாகவும் அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள கூறினார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காகச்செல்லும் பணியாளர்கள் தொடர்பில்இமைச்சர் கருத்து தெரிவிக்கையில் இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன அதனால், தொழில் முகவர் நிலையங்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும், வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக செல்லும் பணியாளர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை மேற்கொள்ளவது முக்கியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
|
|