வெளிநாடுகளில் மரணிக்கும் இலங்கையர் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்!

வெளிநாடுகளில் பணிக்காக சென்று உயிரிழக்கும் இலங்கையர் தொடர்பான புதிய நடைமுறை ஒன்றை வெளியுறவுத்துறை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்கள் தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை இதனூடாக அமைச்சு ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காலமும் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அல்லது வெளிநாட்டில் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதனைஅங்கீகரிப்பதற்காக குறித்த ஆவணங்களை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் சமர்ப்பிக்கவேண்டியிருந்தது.
ஆனால் புதிய முறையின் கீழ், உயிரிழந்தவரின் உறவினர்கள் ஆவணங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடிவதுடன், அவை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொன்சியூலர்அலுவல்கள் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும்.
அனைத்து பிரதேச செயலாளர்களையும் இந்த திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தும் வகையிலான சுற்றுநிரூபம் ஒன்றை ஏற்கனவே உள்நாட்டலுவல்கள் அமைச்சின்செயலாளர் வெளியிட்டுள்ளார்.
குறித்த முறையால் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திற்கு பிரயாணங்களை மேற்கொள்வதையும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் செலவீனங்களையும் தவிர்க்க முடியும்.
இந்த புதிய ஏற்பாட்டால் குறிப்பாக வெளிப் பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் என வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|