வெப்பமான காலநிலை மாத இறுதி வரை நீடிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023

நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (20) அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக அந்த திணைக்களத்தின் ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்ற பணிப்பாளர் அனுஷ வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த மாகாணங்களுக்கு மேலதிகமாக மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களும் தண்ணீர் அருந்துவது அத்தியாவசியமானது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்பும் பெற்றோர், குறைந்த இரண்டு தண்ணீர் போத்தல்களையேனும் அவர்களுக்கு கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நிறமூட்டப்பட்ட செயற்கை பானங்களை தவிர்த்து, நீர் உள்ளிட்ட இயற்கையான பானங்களை அதிகளவில் அருந்த வேண்டும்.

குறைந்த நாளொன்றில் இரண்டு முறையாவது நீராட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், காலை 10 மணி முதல் மாலை 3 வரையான காலப்பகுதியினும், அதிகளவில் வெளியில் நடமாடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: