வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
Friday, July 13th, 2018
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி பாண் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளையும் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளையதினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.
Related posts:
வித்தியா படுகொலை சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது - ஜனாதிபதி உறுதியளி...
|
|
|


