வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் மீட்பு!

Thursday, November 17th, 2016

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் கிடந்த ஒருவரை மானிப்பாய் பொலிசார் மீட்டு யாழ் பொதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நேற்றிரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  கல்லுன்டாய்வெளி பிரதேசத்தில் வெட்டுக்காயத்துடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் துடிதுடித்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதியால் சென்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

12399476761174140931ceb3

Related posts: