வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு இன்று!

Sunday, May 14th, 2017

ஐக்கிய நாடுகள் 2017 வெசாக் தின வைபவத்தின் நிறைவு நிகழ்வு கண்டி தலதா மாளிகை மஹாமழுவையில் இன்று  பிற்பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் நேபாள நாட்டின் ஜனாதிபதி பிந்தியாதேவி பண்டாரி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் வெளிநாட்டுப்பிரதிநதிகள் உள்pளட்ட பலர் பங்குகொள்ளவுள்ளனர்.

வைபவத்தில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக இன்று  விசேட தலதா கண்காட்சி ஒன்றும் தலதா பெரஹர நிகழ்வும் நடைபெறவுள்ளன. வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து கண்டி வரையில் விசேட ரயில் மூலம் அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கமைவாக இன்று காலை 6.30க்கும் ஏழு மணிக்கும் கொழும்பு வரையில் விசேட இரண்டு ரயில்கள் சேவைகள் இடம் பெறுகின்றன.

வைபவத்தின் பின்னர் இவர்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ரயில் சேவை இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.கொழும்பிலிருந்து கண்டி வரையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பௌத்த கொடி மற்றும் ஐக்கிய நாடுகளின் சபையின் கொடியும் காட்சிப்படுத்தப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related posts: