வீரசிங்கம் மண்டபத்தின் முன்றலில் இருந்து பேருந்து சேவைகள் முன்னெடுப்பு!

யாழ்.மாநகரம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் இருந்து மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
யாழ் மாநகரில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து மாநகரின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருப்பதுடன், பேருந்து சேவைகளை நகரின் மத்தியிலிருந்து அப்புறப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனாலும் நகரின் மத்தியிலிருந்து வெளியேறமாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபையினர் முரண்டுபிடித்தனர்.
ஆனாலும் மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் தீர்மானத்தை மீற முடியாத நிலையில் இ.போ.ச பேருந்துகள் அடுத்த 10 நாட்களுக்கு வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக இருந்து சேவையில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டள்ளது. இதேநேரம் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|