வீதிகள் சீரமைக்கப்பட்டதும் ஒப்படைக்கப்படும் – தேசிய வீடமைப்பு அதிகார சபை!

Thursday, June 21st, 2018

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த வருடம் அமைக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள வீதிகள் சீரமைக்கப்பட்ட பின்னர் உத்தியோக பூர்வமாக வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும் என்று அதிகார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கப்பட்டதாவது –

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் அமைக்கப்பட்டன. ஐந்து இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைப்பதற்கான நிதி வழங்கப்பட்டது. தற்போது அந்த வீடுகளை மக்கள் தமது முயற்சியால் அமைத்து முழுமைப்படுத்தி வருகின்றனர்.

மந்துவில், பொன்னாலை பிரதேசத்தில் வழங்கப்பட்ட வீடுகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும் வீடுகள் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் செல்லும் வீதிகள் சீரமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.

பொன்னாலை மற்றும் மந்துவில் பிரதேச வீதியை சீரமைப்பதற்கு 15 மில்லியயன் ரூபா தேவைபடும். இது தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

நிதி கிடைத்தவுடன் வீதிகள் சீரமைக்கப்படும். யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் முயற்சியால் இலவச மின்சார இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 21 ஆயிரத்து 600 ரூபா பெறுமதியான மின்சார இணைப்புகள் வீட்டுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மின் இணைப்பு வேலைகளை நிறைவு செய்தவர்களுக்கு இந்த மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றது. சாலைச் சீரமைப்பு நிறைவடைந்தவுடன் வீடுகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: