வீட்டில் இருந்து பணி புரிவதற்கான சுற்றறிக்கை – அரசாங்கம்!

நாளைமுதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளைமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீட்டில் இருந்து பணி புரியும் வாரமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை தொடர்பில் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
Related posts:
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் அமைதியின்மையை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பயன்படுத...
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கு தெல்லிப்பழை பொலிசார் தீவிர ...
அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - நலன்புரி ...
|
|