வீடுகளை புனரமைக்க உதவிகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் வண். கிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!
Saturday, March 18th, 2017
கடந்தகால அழிவு யுத்தம் காரணமாக பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் வீடுகளை புனரமைப்பதற்கான உதவிகளைப் பெற்றுத்தருமாறு வண்ணைகிழக்க பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றையதினம் (17) குறித்த பகுதியின் 2ஆம் வட்டாரம் பகுதிக்கு மக்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே மேற்குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது
மேலும் வீட்டுத்திட்டம் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளால் தாம் பல்வேறு பட்ட பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்கொடுத்து வருவதாகவும் இவற்றுக்கான தீர்வுகளை பெற்று தருமாறும் அப்பகுதி மக்கள் அம்பலம் இரவிந்திரதாசனிடம் தெரிவித்தனர்.
மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த கோரிக்கைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வுகளை பெற்றத்தர முயற்சிப்ப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


