வீடமைப்புக் கடன் திட்டம் இனி நிபந்தனைகளுடன் –  அதிகார சபை !

Wednesday, July 19th, 2017

வீடுகளைத் திருத்தயமைப்பதற்கும் புதிதாகக் கட்டுவதற்கும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் எதுவித நிபந்தனையுமின்றிக் குறைந்த வட்டியுடன் கடனைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் அதனை திரும்பச் செலுத்த முன்வரவில்லை. இதனால் புதிதாக கடனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என அதிகாரசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது.

கடன் மீளச் செலுத்தப்படாததால், எதிர்காலங்களில் அரச உத்தியோகத்தர்களின் பிணையுடன் பயனாளிகளுக்கு கடன் வழங்குவது குறித்துச் சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். தேசிய ரீதியாக மக்களின் நலன்கருதி வீடுகளைத் திருத்துவதற்கும் புதிதாகக் கட்டுவதற்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் எந்தவித நிபந்தனையுமின்றிக் குறைந்த வட்டியுடன் கடன் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2015,2016ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வீடுகளைத் திருத்துவதற்கும் கட்டுவதற்கும் 2000ற்கும் அதிகமான பயனாளிகளுக்கு 3.67 வீத வட்டியுடன் எதுவித நிபந்தனையுமின்றி யாழ்.மாவட்ட தே.வீ.அ.சபையினால் ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபா வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. பெரும்பாலான பயனாளிகள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முன்வராமையால் 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடனுக்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு கடனை வழங்க முடியாத நிலை அதிகார சபைக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு வசதியாக எதிர்காலங்களில் கடனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அரச உத்தியோகத்தர்களின் பிணையுடன் கடன் வழங்குவது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றார்கள் என தெரிய வருகின்

Related posts: