விவசாய நடவடிக்கைக்காக 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – ஜனாதிபதி!
Saturday, March 30th, 2019
விவசாயிகள் தயாராக இருந்தால், மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தின் நீரை 3 போகங்களுக்கு விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தின் ஊடாக பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவிய பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பராக்கிரம சமுத்திரத்தை போன்று இவ்வாறானதொரு பாரிய நீர்தேக்கத்தை அமைப்பதற்கு நாட்டில் உள்ள சிறந்த பொறியியலாளர்கள் உதவியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, மொரக்காகந்தை நீர்த்தேகத்தின் ஊடாக நீரை பெறும் விவசாயிகள், 3 போகங்கள் விவசாயம் செய்வதற்கு தயாராக இருந்தால், அதற்கான தேவையான அளவு நீர் மொரக்காகந்தை நீர்த்தேக்கத்தில் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுகாதார சேவைகள் சீர்குலைவதை தவிர்க்க யோசனைகள் முன்வைத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !
கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது - யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளப...
நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...
|
|
|


