விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு 1000 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Saturday, October 22nd, 2022
இம்முறை பெரும்போகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு 1000 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொடுக்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் பெரும்போகத்திற்காக MOP வகையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வகை பசளையின் விலை உலக சந்தையில் அதிகரித்துக் காணப்படுவதால் , விவசாயிகளுக்கு அதற்கான நிவாரணங்களை வழங்கவும் தீர்மானிக்கபட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமராட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று போராட்டம்!
இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகிள்!
இந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு !
|
|
|


