விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Thursday, January 13th, 2022
பல்வேறு பிரச்சினைகளால் பயிர்கள் அழிவடைந்த விவசாயிகளுக்கு நியாயமான நட்டஈடு வழங்குவதற்கான முறைமையை உருவாக்கி அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார்.
விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பெரும் போகத்தில் உரங்களை உரிய நேரத்தில் விநியோகஸ்தர்களிடமிருந்து பெறாததாலும், புதிதாகக் கிடைக்கும் உரங்களின் பயன்பாடு தொடர்பில் போதிய தகவல்கள் கிடைக்காததாலும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விலங்குகள் பயிர்களை நாசப்படுத்துவதை தடுப்பதற்காக அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துமாறு விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளமை ககுறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


