விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது – எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சி!
Monday, October 5th, 2020
20 ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லையெனில் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்கமுடியாது என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் 20 ஆவது திருத்தத்தில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் அந்தக்கட்சி மூன்று யோசனைகளை பிரதமருக்கு அனுப்பியுள்ளது.
பிரதமரால் அமைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தை ஆய்வு செய்வதற்கான குழுவின் ஊடாக இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே 20 ஆவது திருத்தம் தொடர்பில் மாற்றங்கள் எனக்கூறி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாற்றங்களில் தமது இந்த மூன்று யோசனைகளும் உள்ளடக்கப்படவில்லை என்றும் விமல் வீரவன்சவின் கட்சி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முஸ்லிம் ஒருவர் உள்ளிட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 6 பேர் கொழும்பில் கைது!
நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா - 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கைய...
நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்க நடவடிக்கை - இராஜாங...
|
|
|


