விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்!

Saturday, November 26th, 2016

தேசிய விளையாட்டு அபிவிருத்தித் திட்டத்தை  கல்வியமைச்சும் விளையாட்டுத் துறை அமைச்சும் இணைந்து முன்னெடுத்துள்ளன.

பாடசாலை மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரையிலான திறமையான வீரர்களை இனங்கண்டு சர்வதேச மட்டத்திலான வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதே இதன் இலக்காகும். இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

விளையாட்டுப் பாடத்திற்கு என 5 ஆயிரம் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் விளையாட்டுத் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

மாணவர்களை சிறுவயது முதல் விளையாட்டில் ஈடுபடுத்துவது இதன் மற்றுமொரு இலக்காகும் என்று அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, அக்கில விராஜ் காரியவசம் ஆகியோர் சுட்டிக்காட்டினார்கள்.

1ca86209e8be5e8318ab3ffcb0c9f9ac_XL

Related posts: