விலை அதிகரிப்பு தகவல்கள் உண்மைக்கு புறம்பானது – எரிபொருளின் தரம் குறித்தும் சோதனை – மீறினால் உரிமம் இரத்து என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லங்கா ஐ ஓசி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவை எரிபொரள் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் போலியானவையாகும்.
இதுபோன்ற போலியான செய்திகளை பதிவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழிகாட்டுதல்களை மீறினால் உரிமம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் தரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை கலப்பது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|