விலை அதிகரிப்பின் எதிரொலி: அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியில்!
Sunday, January 15th, 2017
அதிஷ்ட இலாபச் சீட்டின் விலையை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியடைந்துள்ளதாக அனைத்து இலங்கை அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிஷ்ட லாபச் சீட்டை 30 ரூபா கொடுத்து கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்கள் பின்னிப்பதாக, அந்த சங்கத்தின் பொருளாளர் அலக்ஸ் பர்ணாந்து மேலும் தெரிவித்தார். இந்த விலை அதிகரிப்பு காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரம் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அனைத்து இலங்கை அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் அலக்ஸ் பர்ணாண்டோ குறிப்பிட்டார்

Related posts:
பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் அதிரடி உத்தரவு!
பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான முதற்கட்ட யூரியா உரம் விநியோகம் - விவசாய அமைச...
அரசியலமைப்பு பேரவைக்கு நிமல் சிறிபாலவை பரிந்துரை செய்தார் ஜனாதிபதி!
|
|
|


