விலங்குகள் நல சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம்!
Tuesday, January 11th, 2022
விலங்குகள் நலச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், விலங்குகள் நல சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி விலங்குகள் நலச் சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கையின் சட்ட வரைவாளரால் உருவாக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புதிய அரசியல் யாப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முக்கித்துவம் - அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி!
கடந்த 7 மாதங்களில் 282 கொலைகள், 992 பாலியல் வல்லுறவு, 1779 கொள்ளை!
நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


