விரைவில் சர்வகட்சி அரசாங்கம் – அடுத்தடுத்து அரசியல் கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
Wednesday, August 3rd, 2022
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதான அரசியல் கட்சிகளுடன் மூன்று சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன முன்னணி உட்பட ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இரண்டாவது கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் அதன் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் உட்பட பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் தேசிய காங்கிரஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்றும் (3) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளை சந்திக்கவுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளமதகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்த அடுத்த சந்திப்புகளில் பங்கேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|
|


