விரைவில் உள்ளுராட்சி தேர்தல் – அமைச்சர் முஸ்தபா!

Friday, July 7th, 2017

உள்ளுராட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்   சில தரப்பினர் இந்தத் தேர்தல் குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், அந்தக் கருத்துக்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் தெரிவித்தார்

குப்பை மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குப்பைக்கூழங்களை முறையாக சேகரிப்பதற்கு மூன்று வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. முத்துராஜவெல பிரதேசத்தில் குப்பைகளை சேர்ப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் குப்பை மற்றும் கழிவு முகாமைத்துவம், டெங்கு, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஆகிய விடயங்களை முன்னிறுத்தி சில அரசியல் கட்சிகள் மேடைகளில் பிழையான கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகின்றன. இத்தகைய முரண்பட்ட கருத்துக்களை பொதுமக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

Related posts:


வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு - பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை - பொதுப் பயன்பா...