விரைவில் அமுலுக்கு வருகின்றது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை?

அரசாங்கம் உருவாக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஒழுக்கக் கோவை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒழுக்கக்கோவையை அமுல்படுத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த வாரம் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இந்த ஒழுக்கக்கோவையில் சில திருத்தங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனை பரிந்துரை செய்யும் வகையில் இந்த ஒழுக்கக்கோவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்துமக்கள் குறைகேள் அரங்கு கருத்துக்களத்தில் பேச அழைப்பு!
தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் வித...
வடக்கின் நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலிய...
|
|