வித்தியா கொலை: விடுதலையான நபருக்கு மீண்டும் விளக்கமறியல்!

Tuesday, October 31st, 2017

வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு பிரிதொரு வழக்கில் மீண்டும் கைதாகிய நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு யாழ்.மேல்நீதிமன்றத்தின் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தின் சாட்சிப்பதிவை பெறுமாறு பொலிஸாருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய குறித்த சாட்சிப்பதிவு கிடைத்துள்ளதாகவும், அதில் சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, இந்த வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, யாழ். மேல்நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சாட்சிப்பதிவின் கோவையின் பிரதியொன்றை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை பொலிஸார் இன்று கோரியுள்ளனர்.

கூட்டுப்பாலியல் மற்றும் கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குறித்த நபருக்க எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: