வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

புங்குடுதீவில் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேஷன் முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போதே, சந்தேகநபர்களை இம்மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை வழக்கின் இரண்டு சந்தேகநபர்களின் தாய்மார் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில் சந்தேகநபர்களான இரண்டு பெண்களினதும் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆசிரியர் வெற்றிடங்களை பாடசாலை மட்டத்தில் நிரப்ப நடவடிக்கை -பிரதமர்!
விவசாயிகளுக்கு இழப்பீடாக 1356 கோடி ரூபா!
பாடசாலை விடுமுறை காலத்தில் திருத்தம் - புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அ...
|
|