விதிக்கப்பட்டுள்ள புதிய தடை – தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவிப்பு!

Friday, September 13th, 2024

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கைப்பேசியை எடுத்துச் செல்ல ஏற்கனவே இருக்கின்ற தடையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்களிப்பின் போது குறித்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

000

Related posts: