விதிகளை மீறும் சாரதிகளுக்கான தண்டப்பணம் தொடர்பாக கவனம் செலுத்த முடிவு!
Tuesday, August 23rd, 2016
சாரதித்துவத்தின்போது போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பில் கவனம் செலுத்த நீதிபதிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போது அதிகரித்துவரும் விபத்துக்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் விபத்துக்களின் அளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
சீனாவுடனான உறவு பலப்படுத்தப்படும்!- ஜனாதிபதி!
உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து கீழிறக்கப்பட்டது இலங்கை - உலக வங்கி சுட்டிக்க...
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் வருமானம் - 2021ஆம் ஆண்டு மட்டும் 3,221 மில்லியன் கிட்டியது!
|
|
|


