விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் கல்வி உரிமை மீறப்படுகின்றது – மாணவர்கள் குற்றச்சாட்டு!

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் மாணவர்களின் கல்வி உரிமை மீறப்படுகின்றது என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தர பரீட்சை கடந்த பெப்பிரவரி மாதம் 17 ஆம் திகதி நிறைவடைந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன.
எனினும் இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படாமை மாணவர்களின் கல்வி உரிமையை மீறியுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், குறித்த தாமதம் காரணமாக கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை தாமதமடைவதற்கும் சாத்தியம் உள்ளதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புகையிரத நிலையங்களை அண்டிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.
அரச ஊழியர்கள் பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!
நாட்டில் கொரோனா மரணங்கள் 3 ஆயிரத்து 600 ஐ கடந்தது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!
|
|