விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிப்பு – சுகாதார அமைச்சின் தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Thursday, June 29th, 2023

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்கும் சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

அரச சேவையில் ஈடுபடும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் குறித்த தீர்மானம் பிரேரணை ஒன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அரசாங்கத்தினால் பணிபுரியும் விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த மனுவை செப்டம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட...
தேவையற்ற விடயங்களை கூறிக்கொண்டிராது மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியி...
நாட்டின் பல பாகங்களில் நாளை அதிக வெப்பநிலை நிலவக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!