விசேட டெங்கு தடுப்பு வாரம் இன்றுமுதல் நடைமுறை. சுகாதார அமைச்சு அறிவிப்பு!

……….
விசேட டெங்கு தடுப்பு வாரமொன்றை இன்று (07) முதல் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 70 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு தடுப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் இன்று மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான பொருத்தமான நியமனம் இலங்கை மருத்துவ சங்கத்தினால் வழங்கப்பட்டமை முறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு பொலிஸ் பதவி!
வன்னி மாவட்டத்தில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தி - பிரதமர் மஹிந்த ராஜபக...
ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத கடல்வாழ் உயிரினம்!
|
|