விசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம்!

விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இதற்கான சட்ட வரைபுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.
விசா காலாவதியான பின்னர் சலுகை அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். எனினும், வழங்கப்படும் கால அவகாசத்திற்குள் விசாவை புதுப்பித்துக்கொள்ளாத வெளிநாட்டு பிரஜைகளுக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத்தை விட அதிக அபராதத்தை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாடுகளில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
மன்னார் அந்தோனியார்புரம் கிராமம் அழிவடையும் ஆபத்துள்ளதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை!
சமுர்த்தி கொடுப்பனவுகள் குறைக்கப்பட மாட்டாது!
இலங்கை இராணுவத்தினர் மீது மாலியில் தாக்குதல் - 02 பேர் பலி!
|
|