வாழ்வாதார உதவிகள் கூட தற்போது கிடைப்பதில்லை – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை மத்தி மக்கள் சுட்டிக்காட்டு!
Wednesday, December 14th, 2016
நீண்டகாலமாக பல அசௌகரியங்களை எதிரிகொண்டு வரும் எமது பகுதியைச் சேர்ந்த வறிய மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை மத்தி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியாலை மத்தி மக்களது கோரிக்கைக்கிணங்க குறித்த பகுதிக்கு இன்றையதினம் (14) நேரில் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந் தறிந்துகொண்டபின்னர் குறித்த பகுதி மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார். இதன்போதே குறித்த பகுதி மக்களால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது பகுதி மக்களுக்கு கடந்தகாலத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் பல உதவித்திட்டங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது. கடந்த ஆட்சி மாற்றத்தினால் எமது பகுதிக்கு வழங்கப்பட இருந்த வீட்டுத்திட்டங்கள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் நாம் மழைகாலங்களில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதுடன் வறிய மக்களாகிய எமக்கு தற்போது திருத்த வேலைகளுக்கு கூட சிமெந்து பொதிகள் கிடைக்காத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்தவருகின்றோம்.

அதுமட்டுமல்லாது எமது பகுதி மக்களது வாழிடங்களில் மலசலகூடங்கள் பல சேதமடைந்துள்ளதால் பல நோய்த்தொற்றுக்கும் ஆளாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு எமது பகுதியின் வளர்ச்சிக்கு உதவி பெற்றுத்தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மக்களது கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட இரவிந்திரதாசன் குறித்த பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அரியாலை மத்தி மாதர்சங்க தலைவி திருமதி விஜயலட்சமி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக குழு உறுப்பினர் திருமதி தயாழினி மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்தகொண்டனர்.

Related posts:
|
|
|


