வாட் வரியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்! – ஜனாதிபதி!
Thursday, June 30th, 2016
மதிப்பு கூட்டு வரி (வாட்) மீது சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில் வாட் வரி அதிகரிக்கப்பட்டதன் காரணமாக மக்களின் வாழ்க்கை செலவு பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி இதனை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட வரி மீது சில திருத்தங்களை மேற்கொள்ள தான் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.
இது குறித்து தான் பிரதமருடன் வரும் திங்களன்று விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அதன் பின்னர் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கூடிய வகையில் சம்பந்தப்பட்ட வரி திருத்தங்களை மேட்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை - இந்திய இடையேயான உறவுப்பாலம் வலுவடைந்துள்ளது - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்!
கல்வி நிர்வாகசேவை தரம் III க்கு 198 பேர் நியமனம்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம...
|
|
|


