வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிப்பு – பொது மக்களின் 200 மில்லியன் பணம் மேலதிகச் செலவு என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, August 6th, 2024

இலங்கைத்தீவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் 27.5 அங்குலங்களாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த முறை வாக்குச் சீட்டின் நீளம் 26.5 அங்குலங்களாக காணப்பட்டது. அதன்படி, வாக்குச் சீட்டை அரை அங்குலத்தை அதிகரிப்பதாயின் பொது மக்களின் 200 மில்லியன் ரூபாயை மேலதிகமாக செலவிட நேரிடும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 78 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று (05) வரையில், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும...
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாம...
வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் - சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவத...