வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் – அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தகவல்!
Friday, February 10th, 2023
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான இந்த வருடத்துக்கான தேர்தல் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது, எனினும் இவ்வருடம் எல்பிட்டிய பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறாது.
அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பட்டியல்கள் அனைத்தும் தற்போது கிடைத்துள்ளதாகவும் அரசாங்க அச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அதிகரித்த வட்டி வீதம் : அரச உத்தியோகத்தர்கள் பாதிப்பு!
டெங்கு தொற்று தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!
14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி வீதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளது -பதில் நிதியமைச்சர் ரஞ...
|
|
|


