வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவு – அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவிப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்த பின்னர், விரைவில் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடியே 77 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
செவ்வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்த நவீன செய்முறையும் பயிற்சி வகுப்பும்!
சாதாரணதரப் பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டையை துரிதப்படுத்தவும்!
பசறை கோர விபத்தின்போது மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம் - வைத்தியரின் நெகிழ்ச்சியான பதிவு!
|
|