வாக்காளர் இடாப்பில் இருந்து 126,481 பெயர்கள் நீக்கம்!
Wednesday, June 27th, 2018
கடந்த வருடம் வாக்காளர் இடாப்பில் இரட்டைப் பதிவுகளாக இடம்பெற்றிருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 481 பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட தேர்தல் திணைக்களத்தின் மேம்பாட்டு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இரட்டைப் பதிவுகளில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களை, அவர்களது உரிய முகவரிக்கு மாத்திரம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரே அடையாள அட்டை இலக்கத்தில் இருவேறு நபர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பில் உரிய தரப்பினரின் ஊடாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
கிடைக்கப்பெற்றஅரசியல் பலத்திற்கு ஊடாகவே மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடிந்தது–டக்...
தவணைப் பரீட்சை நேர அட்டவணை பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு!
மீட்டர் கருவி விவகாரம்: முச்சக்கர வண்டிச் சாரதிகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை!
|
|
|


