வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பேருந்து தரிப்பு நிலையங்களில் வழங்குவதற்கு நடவடிக்கை!

இலங்கையில் முதன் முறையாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரததை முக்கிய பேருந்து தரிப்பு நிலையங்களில் வைத்து வழங்குவதற்கு தென் மாகாண மோட்டார் வாகன பிரிவு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தென் மாகாண மோட்டார் வாகன ஆணையாளர்அமில இந்திக தகவல் தருகையில் இணையத்தளத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழான முதற் கட்டம் காலி எல்பிட்டிய, அக்குரஸ்ஸ, தங்கல்ல, மாத்தறை ஆகிய பஸ்தரிப்பிடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மோட்டார் சைக்கள், முச்சக்கர வண்டி, கார், வான் மற்றும் கெப் வாகனங்களுக்காக இணையத்தள வசதி இருக்குமாயின் வீடுகளில் இருந்தே வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
Related posts:
வவுனியா நெற் களஞ்சியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு!
இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
கிளிநொச்சியில் துப்பாக்கி சூட்டு: உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம்!
|
|