வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் தீர்வு!

Tuesday, March 9th, 2021

வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகள் சீர்செய்யப்பட்டு அப்பகுதி மக்களுக்கான மின்சார இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் மேற்கொண்டுள்ளார்.

குறித்த மின் வழங்கும் மார்க்கத்தில் மரங்கள் வெட்டப்படாதால் நீண்ட காலமாக மின்சார வசதி பெற்றுக்கொள்ள முடியாமல் அப்பகுதி மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயம் நாடாளுமன்ற திலீபனின் கவனத்திற்கு அப்பகுதி மக்களால் கொண்டுவரப்பட்டிரந்தது.

இதையடுத்து மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அதற்கான துரித நடவடிக்கைகளை  துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி இடையூறாக இரந்த மரங்களை அகற்றுவதற்கு வலியுத்தியிருந்தார்.

ஆனாலும் அதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தால் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுக்கான ஜனாதிபதியின் கூட்டத்தின் போது இவ்விடயம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைம குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புளியங்குளம் லைக்கா கிராமத்தில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த 30 மாணவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஒரு வருடத்துக்கான பேருந்து போக்குவரத்து அனுமதி சீட்டினை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: