வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை எவருக்கும் இல்லை – வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவிப்பு!

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை உற்பத்தின் பண்ணையை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரியும் அவ்வாறான திட்டமிருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா, வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அராலி - சங்கானை வீதியில் ஒருவர் வெட்டிப் படுகொலை!
வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்...
|
|