வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு வரவேற்பு!

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவினது, இடைக்கால அறிக்கையை வரவேற்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு மறுசீரமைப்பின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்த காலவரையறையுடன் கூடிய திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின் அடுத்த விவாதங்கள் குறித்த தெளிவான திகதிகள், அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையின் இறுதி நகல்வரைவு எப்போது வெளியிடப்படும் என்பன தொடர்பான தெளிவான அம்சங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் கோரியுள்ளது.
அத்துடன், நகல்வரைவு எப்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்பது தொடர்பிலும் தெளிவான அறிவிப்புக்கள் வெளியிட வேண்டும்இடைக்கால அறிக்கை அல்லது அரசிலமைப்பு தொடர்பான இறுதி வரைவு நகல் என்பன தொடர்பான பொது ஆலோசனைகள் எப்போது பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அந்த நிலையம் வினவியுள்ளது
இடைக்கால அறிக்கையானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என முன்னர் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தாமதத்தின் பின்னர் அறிக்கை வெளிவந்துள்ளது
எனவே, அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளின் எஞ்சியுள்ள நிலைகள் குறித்த தெளிவான பயணப் பாதையும் அர்ப்பணிப்பும் அத்தியாவசியமானது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது
Related posts:
|
|